ஐயப்பன் ஆலய ஸ்ரீ ஜிர்னோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென் பள்ளிப்பட்டு மதுரா மேட்டுப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் ஆலய ஸ்ரீ ஜிர்னோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று விமர்சையாக நடைபெற்றது கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜை, புண்ணியாவாசனம், மகா கணபதி பூஜை, கலச புறப்பாடு உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டும் தம்பதி சங்கல்பம் துவார பூஜை சாமிக்கு 1008 சகஸ்ரநாமம் இரண்டாம் காலை யாகசாலை உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு இன்று அதிகாலை முதல் சிறப்பு அலங்காரங்கள் அபிஷேகம் செய்யப்பட்டு கலச புறப்பாடு நடைபெற்றது பின்னர் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது இந்நிகழ்வில் கலசப்பாக்கம் தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம், போளூர், எலத்தூர், மேட்டூர், வில்வாரணி, நாயுடுமங்கலம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story

