குமரி பகவதி அம்மன் கோவிலில் நாளை நிறை புத்தரிசி பூஜை

X
நெற்பயிர்கள் செழித்தோங்கி அறுவடை அதிகரித்து நாடு செழிப்படைய வேண்டும் என்பதற்காக நிறைபுத்தரிசி பூஜை நடத்தப்பட்டு கிறது. இந்த ஆண்டுக்கான தை மாத நிறைப்புத்தரிசி பூஜை நாளை 11ஆம் தேதி அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நடைபெற உள்ளது. இதற்காக நாளை அதிகாலையில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான வயல்களில் நெற்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு கட்டு கட்டாக கட்டி கன்னியாகுமரி மெயின் ரோட்டில் உள்ள அறுவடை சாஸ்தா கோயிலுக்கு கொண்டு வந்து சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. பின்னர் அந்த கட்டுகளை கோவில் மேல் சாந்தி தலைமையில் சுமந்தபடி மேளதாளம் முழங்க கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வருவார்கள். பின்னர் கோவில் மூலஸ்தான மண்டபத்தில் நெற் கதிர்களை பகவதி அம்மனுக்கு படைத்து சிறப்பு பூஜை நடக்கிறது. பூஜைகளை கோவில் மேல் சாந்திகள் நடத்துகின்றனர்.
Next Story

