விடுதியில் பிணமாகக் கிடந்த தொழில் அதிபர்

X
பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூர் ஊராட்சி வெங்கிட்டாபுரத்தை சேர்ந்தவர் கணேஷ் சக்திவேல் (வயது 50). இவர் ஆட்டோ கன்சல்டிங் நடத்தி வந்தார். இவர் வெங்கிட்டாபுரத்தில் மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கணேஷ் சக்தி வேலுக்கு, குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக அதிக அளவில் மது குடித்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இதனால் குடிப்ப ழக்கத்தை விடுமாறு குடும்பத்தினர் வலியுறுத்தி வந்தனர். ஆனால் அவர் குடிப்பழக்கத்தை விடாததால் அடிக்கடி கணவன் -மனைவிக்குள் சண்டை ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பனப்பாளையம் பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கி இருந்தார். இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக அறை திறக்கப்படாத நிலையில், சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள், பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் விடுதி அறைக்குள் சென்று பார்த்தபோது கணேஷ் சக்திவேல் பிணமாக கிடந்துள்ளார் இதையடுத்து அவரது உடலை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

