அருள்மிகு ஸ்ரீ வெங்கடேச பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேக விழா
கொசவன் பேட்டை அருள்மிகு ஸ்ரீ வெங்கடேச பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர் திருவள்ளூர் மாவட்டம் ஆரணி அருகே உள்ள கொசவன் பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வெங்கடேச பெருமாள் திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது யாக கலச பூஜைகளுடன் கலச நீர் மேல தாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு புண்ணிய நதி நீர் கொண்டு கோபுர கலசங்களுக்கும் பெருமாளுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது பின்னர் பக்தர்களின் மீது கலசநீர் தெளிக்கப்பட்டது இதில் ஆரணி பெரியபாளையம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என கோஷங்களை எழுப்பியவாறு கும்பாபிஷேக விழாவில் பக்தி பரவசத்துடன் ஸ்ரீ வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்தனர்.
Next Story







