கோவை: மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த பரிதாபம் !

X
கோவை மாவட்டம் சூலூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன் மனைவி பவானி (வயது 44). இவரது கணவர் கூலி வேலை செய்து வரும் நிலையில் சூலூர் அருகே உள்ள மைலாம்பட்டி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 22 வயதில் ஒரு மகள் உள்ளார். தைப்பூச திருவிழாவிற்காக மாரியப்பன் பாதயாத்திரையாக பழனி கோவிலுக்கு சென்றுள்ளார். வீட்டில் தனியாக இருந்த பவானி குளிப்பதற்காக நேற்று சாதாரண வாட்டர் ஹீட்டர் பக்கெட்டில் போட்டு தண்ணீர் சுட வைத்துள்ளார். தண்ணீர் சூடாகி விட்டதா என்பதற்காக வாட்டர் ஹீட்டர் ஆன் செய்திருப்பது தெரியாமல் பக்கத்தில் கையை விட்ட பவானி மின்சாரம் தாக்கியதில் அங்கேயே சுருண்டு விழுந்தார். அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பவானியை ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பவானி உயிர் இழந்து விட்டதாக கூறினர். சூலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பவானி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் பாதையாத்திரை போயிருந்த சமயத்தில் மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story

