மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயிலில் அஷ்டபந்தனம் மகா கும்பாபிஷேகம்
தேனி நகர் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த சந்தை மாரியம்மன் என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோயிலில் புனரமைப்பு பணிகள் முடிவு பெற்றதை அடுத்து குடமுழக்கு திருவிழா இன்று விமரிசையாக நடைபெற்றது முன்னதாக கோயில் அருகே பிரம்மாண்ட யாகசாலை அமைக்கப்பட்டு யாக குண்டங்களில் பலவித மூலிகை பொருட்கள் கொண்டு சிறப்பாக யாகம் வளர்க்கப்பட்டது தொடர்ந்து பூர்ணாஹூதி சமர்ப்பிக்கப்பட்டு புனித கலச குண்டத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டு கடம் புறப்பாடு நடைபெற்றது வேதாச்சாரியார்கள் புனித கலச குன்டத்தை தலையில் சுமந்து கொண்டு மேளம் நாதஸ்வரம் முழங்க கோயில் வளாகத்தை சுற்றி வந்து விமான கலசத்தை அடைந்தனர் ஒற்றைச்சப்பு விமான கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு புனித கலச நீர் ஊற்றி அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது தொடர்ந்து கலசங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டு கோயிலை சுற்றி கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் மீது புனித கலச நீர் தெளிக்கப்பட்டது மூலவர் அம்மனுக்கு விசேஷ பூஜைகள் நடத்தி தீபாராதனை காட்டினர் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது
Next Story




