தமிழக அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி
தமிழக அளவில் இன்டர் ஸ்கூல் ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் 300க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பங்கேற்று தங்களது தனித் திறமையை வெளிப்படுத்தி அசத்தினர். போடி சிசம் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் அதிக பரிசுகளை பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர் தேனி மாவட்டம் போடி அருகே தர்மத்துப்பட்டியில் நடைபெற்ற தமிழக அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். வயதின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளில் ஸ்கேட்டிங் போட்டியானது நடத்தப்பட்டது இதில் போடி சிசம் பள்ளியைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் அதிகளவிலான பரிசுகளை பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர். ஆறு வயது சிறுவர் முதல் இந்த போட்டியில் கலந்துகொண்டு ஸ்கேட்டிங் தடத்தில் சீரிப்பாய்ந்து தங்களது தனித்தன்மையை வெளிப்படுத்தினர். ஸ்ரீ சகஸ்ர மல்டி ஸ்போர்ட்ஸ் அகாடமி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஸ்கேட்டிங் போட்டியினை சிசம் பள்ளி குழுமத்தின் தாளாளர் வேதா ஜெயராஜ் போட்டியினை தூவக்கி வைத்து மாணவ மாணவியர்களுக்கு போட்டியில் வெற்றி பெறுவதற்கான சில அறிவுரைகள் வழங்கினார்.
Next Story




