ராமநாதபுரம் பெண் கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கைக்குழந்தையுடன் பெண் பெட்ரோல் ஊற்றியதால் பரபரப்பு. பாதுகாப்பு காவலர்கள் தடுத்து நிறுத்தி பெட்ரோலை பறித்து விசாரணை செய்து வருகின்றனர்.‌‌
ராமநாதபுரம் மாவட்டம் காட்டூரணி கிராமம் தங்கப்பா புரம் பகுதியைச் சேர்ந்தவர் சோனியா.. இவர் கை குழந்தை உட்பட இரண்டு குழந்தைகளோடு இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் குறை தீர்ப்பு கூட்டத்திற்கு தனது குழந்தைகளோடு மனு கொடுக்க வந்த நிலையில் திடீரென மறைத்து வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த கேணிக்கரை போலீசார் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். பின்னர் விசாரித்தபோது அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் பொதுப் பாதையை ஆக்கிரமித்து வைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே செல்ல கூடாது என தொடர்ந்து அச்சுறுத்துவதாகவும் கடப்பாரை, மண்வெட்டி உள்ளிட்டவற்றால் தொடர்ந்து அச்சுறுத்துவதாகவும், வீட்டு வாசலில் குப்பைகளை போட்டு எரிப்பதாகவும் வாசலின் முன் சிறுநீர் கழிப்பதாகவும், இதுகுறித்து பலமுறை கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீசார் இது குறித்து நேரில் விசாரணை செய்து இது போன்ற நடவடிக்கை ஈடுபடக்கூடாது எனவும் எச்சரிக்கை செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மன உளைச்சலில் இருந்த அந்தப் பெண்மணி கைக்குழந்தையுடன் ஆட்சியர் அலுவலகம் முன்பாக பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது.. தொடர்ந்து கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து இது கறித்து விசாரணை செய்து வருகின்றனர்
Next Story