பண்ருட்டி: புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

X
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது புதுப்பேட்டை கரும்பூர் மெயின் ரோடு பகுதியில் உள்ள ஒருவீட்டில் சோதனை நடத்தினர். இதில் அங்கு புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரிந்தது. இதையடுத்து அங்கிருந்த புகையிலை பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்து இது தொடர்பாக அய்யனார் மனைவி மலர் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
Next Story

