வாணியம்பாடி அருகே ஓடும் பேருந்து கர்ப்பிணி பெண்ணிற்கு ஏற்பட்ட பிரசவ வலி,

X
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஓடும் பேருந்து கர்ப்பிணி பெண்ணிற்கு ஏற்பட்ட பிரசவ வலி, கர்ப்பிணி பெண்ணை பத்திரமாக மீட்டு, ஆம்புலன்ஸில், மருத்துவமனைக்கு, அனுப்பிய போது, ஆம்புலன்ஸிலேயே ஆண் குழந்தை பிறப்பு தாயும் சேயும் நலமாக மருத்துவமனையில் அனுமதி வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்காவிற்குட்பட்ட ஜவ்வாதுமலைத்தொடரில் உள்ள தோனியூர் ஜார்தான்கொல்லை பகுதியை சேர்ந்த சேகர் மற்றும் அவரது மனைவி நிர்மலா மற்றும் மகன் மோகித் 4 வயது ஆகியோர் கர்நாடக மாநிலம் சிக்மங்களூர் பகுதியில் கூலி வேலை செய்து வந்த நிலையில், நிர்மலாவிற்கு இரண்டாவது பிரசவத்திற்காக கர்நாடகா மாநிலத்திலிருந்து சொந்த ஊர் திரும்பி கொண்டு இருந்தபோது திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெகுந்தி சுங்க சாவடியில் நிர்மலாவிற்கு, திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் சுங்கச்சாவடியில் பேருந்து நிறுத்தப்பட்ட நிலையில், உடனடியாக பணியில் இருந்த சுங்க சாவடி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மூலம் நிர்மலாவை, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆம்புலன்ஸிலேயே நிர்மலாவுக்கு பிரசவவலி அதிகமாகி ஆண் குழந்தை பிறந்துள்ளது, அதனை தொடர்ந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் தாயும் சேயும் நலமுடன் அனுமதிக்கப்பட்டனர்.. மேலும் பேருந்தில் பிரசவ வலி ஏற்பட்ட பெண்ணை சுங்கச்சாவடி ஊழியர்கள் மீட்டு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்த சம்பவம் சற்று நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது..
Next Story

