பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த நபர் கைது

பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த நபர் கைது
X
மோகன்ராஜ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர்
பெரம்பலூர் மாவட்டம், வெங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் மோகன்ராஜ் (29). இவர் அப்பகுதியில் உள்ள வீடுகளில் பெண்கள் குளிக்கும் போது அவர்களுக்கு தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதை பார்த்த பொதுமக்கள் அவரை தர்மஅடி கொடுத்து, அரும்பாவூர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் பேரில் வழக்கு பதிந்த போலீசார் மோகன்ராஜ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story