ராமநாதபுரம் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது

ராமநாதபுரம் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
X
முதுகுளத்தூர் தெற்கு தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ தர்ம முனிஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா நடைபெற்றது :
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தெற்கு தெருவில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று மங்கள இசை, ஸ்ரீ கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, கிராம சங்கல்பம், வாசு சாந்தி பூசையுடன் தொடங்கப்பட்டது. இரண்டாம் கால யாகசாலை பூஜையாக இன்று விக்னேஸ்வரர் பூஜை, கோ பூஜை ,லட்சுமி பூஜை, சப்த கன்னி பூஜை, நாடி சந்தானம், திரவிய ஹோமம், பூர்ணாகுதி நடைபெற்று சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கடன் புறப்பாடு கோவிலை வந்தடைந்து தர்ம முனீஸ்வரர் கோயில் ஆலயத்தில் உள்ள கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. பின்னர் பரிவார தெய்வங்களான ஸ்ரீசிவகாளியம்மன், ஸ்ரீபேச்சியம்மன் கோவிலுக்கும் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. கும்பாபிஷேகம் முடிந்த பின்பு ஸ்ரீ தர்ம முனிஸ்வரர், ஸ்ரீ சிவகாளி அம்மன், ஸ்ரீ பேச்சியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு விபூதி, சந்தனம் ,பன்னீர், இளநீர் ,உள்ளிட்ட 16 வகையான மூலிகை திரவியங்களால் அபிஷேக அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட சிறப்பு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது
Next Story