மூடப்பட்ட குவாரி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் கல்குவாரியால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாவதாக புகார்

X
அருப்புக்கோட்டை அருகே பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டு வந்த சீல் வைத்த அதிகாரிகள்; மீண்டும் அந்த கல்குவாரி திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் கல்குவாரியால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாவதாக பொதுமக்கள் புகார்; மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் எனவும் எச்சரிக்கை விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே புலியூரான் ஊராட்சிக்கு உட்பட்ட இலங்கிபட்டி கிராமத்தில் சாய்பாபா புளு மெட்டல்ஸ் என்ற பெயரில் தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரியில் இருந்து லோடு ஏற்றிச் செல்லும் டாரஸ் லாரிகள் இலங்கிபட்டி புலியூரான் கிராமங்கள் வழியாக செல்வதால் அதிக அளவு தூசுகள் கிளம்புவதாகவும், மேலும் இந்த கல்குவாரியில் குறிப்பிட்ட நேரத்தில் வெடி வெடிக்காமல் மாலை நேரத்தில் வெடி வெடிப்பதாகவும், அதிக அளவு மருந்துகள் கொண்டு வெடி வெடிப்பதால் இரண்டு கிராமத்திற்கும் அதிக அதிர்வுகள் ஏற்பட்டு வீடுகள் சேதமடைவதாகவும், மேலும் இந்த கல்குவாரி கிடங்கு பாதுகாப்பு இல்லாமல் திறந்த நிலையில் இருப்பதாகவும் புகார் எழுந்ததை அடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் கனிமவளத்துறை அதிகாரிகள் கடந்த மூன்று நாட்களுக்கு முன் இந்த குவாரிக்கு சீல் வைத்தனர். இந்நிலையில் தற்போது அந்த கல்குவாரி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் இந்த கல்குவாரியில் குறிப்பிட்ட நேரத்தில் வெடி வெடிக்காமல் மாலை நேரத்தில் வெடி வடிப்பதாகவும் அதிக அளவு மருந்துகள் வைத்து வெடி வடிப்பதால் மிக அதிகமான அதிர்வுகள் ஏற்பட்டு இலங்கிப்பட்டி கிராமத்தில் உள்ள வீடுகள் சேதம் அடைவதாகவும், மேலும் வெடிமருந்து வெடித்த கழிவுகள் கலந்த தண்ணீரை ஓடையில் திறந்து விடுவதால் அந்தத் தண்ணீரை குடிக்கும் மாடுகள் நோய்வாய்ப்பட்டு இறந்து விடுவதாகவும், காடுகள் முழுவதும் தூசி படர்வதால் விவசாயம் செய்ய முடியவில்லை எனவும், இனி கல்குவாரி செயல்பட்டால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் எனவும் அப்பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர். பேட்டி 1 - காட்டு ராஜன் பேட்டி 2 - அம்சவள்ளி ஊர் - இலங்கிபட்டி
Next Story

