காரியாபட்டி கிழக்கு ஒன்றியத்தில் மாவட்ட கழக பொருளாளர் தலைமையில் விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜையுடன் தொடங்கிய அதிமுக பூத் கமிட்டி களஆய்வு

X
காரியாபட்டி கிழக்கு ஒன்றியத்தில் மாவட்ட கழக பொருளாளர் தலைமையில் விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜையுடன் தொடங்கிய அதிமுக பூத் கமிட்டி களஆய்வு அஇஅதிமுக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி யார் அவர்களின் ஆணைக்கிணங்க, விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, விருதுநகர் கிழக்கு மாவட்டம் காரியாபட்டி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட 32 பூத் கமிட்டிகளில் மாவட்ட கழக பொருளாளரும், மண்டல தேர்தல் பொறுப்பாளருமான குருசாமி தலைமையிலும், காரியாபட்டி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் தோப்பூர் முருகன் முன்னிலையிலும் பூத் கமிட்டி தொடர்பான களஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக, மாங்குளம் கிராமத்தில் விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜையுடன் பூத் கமிட்டி கள ஆய்வு தொடங்கியது. காரியாபட்டி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அதிமுக கிளைகளில் பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் செய்வதற்கான விண்ணப்பப் படிவங்கள் ஏற்கனவே வழங்கப்பட்ட நிலையில், காரியாபட்டி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மாங்குளம், அரசகுளம், குரண்டி, முஷ்டக்குறிச்சி, கள்ளங்குளம், சாலை மறைக்குளம் உள்ளிட்ட 32 பூத் கமிட்டிகளில் மண்டல தேர்தல் பொறுப்பாளர் குருசாமி மற்றும் காரியாபட்டி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் தோப்பூர் முருகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பணிகள் குறித்தும், கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையில் அஇஅதிமுக வை மாபெரும் வெற்றி பெற செய்வதற்கான ஆலோசனைகளை பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு வழங்கினர். இந்த கள ஆய்வின் போது அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், காரியாபட்டி கிழக்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

