மீன் வரத்து குறைவு

மீன் வரத்து குறைவு
X
ஈரோடு மார்க்கெட்டுக்கு மீன் வரத்து குறைவு வஞ்சரம் ரூ.950க்கு விற்பனை
ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டில் 30-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு நாகப்பட்டினம், தூத்துக்குடி, ராமேஸ்வரம், காரைக்கால், கேரளா போன்ற பகுதிகளில் இருந்து கடல் மீன்களும், அணை மீன்களும் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த வாரம் 25 டன் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்த நிலையில் இன்று 15 டன் மீன்கள் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. வரத்து குறைவு எதிரொலியாக கடந்த வாரத்தை விட நேற்று சில மீன்களின் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ வஞ்சரம் ரூ.800-க்கு விற்கப்பட்ட நிலையில், நேற்று ரூ.950 ஆக அதிகரித்து விற்பனையானது. இதேபோன்று, கடந்த வாரம் வெள்ளை வாவல் கிலோ ரூ.900-க்கு விற்கப்பட்ட நிலையில், நேற்று ரூ.1,200-க்கு விற்பனையானது. மற்ற மீன்களின் விலை கிலோவில் வருமாறு கருப்பு வாவல் - 800, கடல் அவுரி - 750, முரல் - 350, கடல் பாறை - 550, கனவா - 400, சங்கரா - 400, விளாமின் - 550, டுயானா - 700, கிளி மீன் -700, மயில் மீன் - 700, ப்ளூ நண்டு - 700, பெரிய இறால் - 700, சின்ன இறால் - 500, தேங்காய் பாறை - 550, திருக்கை - 400, கொடுவா - 800, ரெட் சால் - 750, சால்மோன் - 900, மத்தி - 250, அயிலை - 300.
Next Story