நீச்சல் போட்டி

X
மண்டல அளவிலான விளையாட்டு போட்டியில் நீச்சல், தடகளத்தில் ஈரோடு தீயணைப்பு வீரர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றனர். தீயணைப்பு வீரர்களுக்கான மண்டல அளவிலான விளையாட்டு போட்டி கடந்த மாத இறுதியில் இரு தினங்கள் கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. 8 மாவட்டங்களை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர். இதில், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த வீரர்கள் தடகள போட்டி, நீச்சல் போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றனர். துறை ரீதியான ஒட்டு மொத்த போட்டியில் மூன்றாமிடம் பிடித்தனர். போட்டிகளில் தன் தனி திறனை வெளிப்படுத்திய வீரர்கள் வரும் 12 முதல் 14ம் தேதி வரை மதுரையில் நடக்கும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். இவர்கள் அனைவரும் கடந்த 3 முதல் இன்று (10ம் தேதி) வரை திண்டுக்கல்லில் பயிற்சி பெறுகின்றனர். நாளை (11ம் தேதி) மதுரை கிளம்பி செல்ல உள்ளனர் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்
Next Story

