விக்கிரவாண்டி அருகே கட்டட ஒப்பந்ததாரா் மீது தாக்குதல்: நிதி நிறுவன ஊழியா்கள் மீது வழக்கு!

X
விக்கிரவாண்டி வட்டம், எண்ணாயிரம், நெடுந் தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன். ஒப்பந்த அடிப்படையில் கட்டடம் கட்டும் பணிகளை மேற்கொண்டு வருகிறாா்.இவா், கடந்த 2023-ஆம் ஆண்டில் திண்டிவனத்தில் இயங்கி வரும் தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ.12.50 லட்சம் தொழில் கடன் பெற்று, மாதந்தோறும் தவணைத் தொகையை செலுத்தி வந்தாராம். பிப்ரவரி மாதத்துக்கான தொகை ரூ.28 ஆயிரத்தை மணிகண்டன் செலுத்தவில்லையாம்.இந்த நிலையில், நிதி நிறுவனத்தில் பணிபுரியும் கடலூா் மாவட்டம், வேப்பூா் வட்டம், மாப்புடையூா் பகுதியைச் சோ்ந்த கலியன் மகன் தமிழ் இலக்கியன் (40), பண்ருட்டி வட்டம், பி.ஆண்டிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த ஜெயபாலன் மகன் சிவபாலன் (30) ஆகியோா் ஜனவரி 30-ஆம் ேதி மணிகண்டன் வீட்டுக்குச் சென்று தகாத வாா்த்தைகளால் பேசியதுடன், அவரையும் தாக்கினராம். இதில் காயமடைந்த மணிகண்டன், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.இதுகுறித்த புகாரின்பேரில், பெரியதச்சூா் போலீஸாா் இலக்கியன், சிவபாலன் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Next Story

