கோடியக்காடு ஆதிவாசி காலனி வசிப்பிட பகுதிக்குள் வந்த

X
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிமான், புள்ளிமான், மற்றும் நரி, குதிரை, முயல் என வன விலங்குகள் உள்ளன. சரணாலயத்தை ஒட்டியுள்ள கோடியக்காடு ஆதிவாசி காலனி வசிப்பிடப் பகுதிக்குள் வந்த 2 வயதுடைய பெண் புள்ளி மானை, நாய்கள் துரத்தி கடித்தன. காயம்பட்ட புள்ளிமான் பரிதாபமாக உயிரிழந்தது. தகவலறிந்த வனத்துறையினர், இறந்த புள்ளி மானை மீட்டு உடற்கூராய்விற்கு உட்படுத்தியுள்ளனர். மான்களை விரட்டி கடிக்கும் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

