விழுப்புரத்தில் பணமில்லா பரிவா்த்தனை: அரசுப் பேருந்து நடத்துநா்களுக்குப் பரிசு!

விழுப்புரத்தில் பணமில்லா பரிவா்த்தனை: அரசுப் பேருந்து நடத்துநா்களுக்குப் பரிசு!
X
பணமில்லா பரிவா்த்தனை: அரசுப் பேருந்து நடத்துநா்களுக்குப் பரிசு!
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்துக்குள்பட்ட 6 மண்டலங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு வழங்கும் இயந்திரம் மூலம் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதில், மண்டல அளவில் அதிகளவில் மின்னணு பரிவா்த்தனைகளை மேற்கொண்ட நடத்துநா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.இதைத் தொடா்ந்து, விழுப்புரத்திலுள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், மின்னணு பயணச்சீட்டு வழங்கும் இயந்திரம் மூலம் அதிகளவில் பரிவா்த்தனைகளை மேற்கொண்ட நடத்துநா்களை கோட்டத்தின் மேலாண் இயக்குநா் கே.குணசேகரன் பாராட்டி, பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசினாா். நிகழ்வில் மண்டல பொது மேலாளா் டி.சதீஷ்குமாா் மற்றும் அலுவலா்கள், போக்குவரத்துப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Next Story