பொதுமக்களால் பரபரப்பு

X
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள கங்காபுரத்தில் ஏராளமான சாய தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் இந்த பகுதியில் இருந்து வெளியேறும் சாயக்கழிவுகள் மேட்டுக்கடை அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வாய்க்காலில் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் இன்று நள்ளிரவில் கங்காபுரத்தில் உள்ள நவீன பிராசஸ் மில்லில் இருந்து 4 பேரல்களில் சாயக் கழிவுகளை பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வாய்க்காலில் வாகனத்தில் இருந்து வந்தவர்கள் கொட்டு கொண்டு இருந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் சாய கழிவுகள் ஏற்றி வந்த டாட்டா ஏஸ் வாகனத்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து தகவல் கிடைத்ததும் சித்தோடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டாம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடும் நிலையில் நடு வாய்க்காலில் சாயக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ள சம்பவம் விவசாயிகள் மற்றும் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளன.
Next Story

