இரண்டு நாட்களுக்கு முன்பு மாயமான சிறுவன் சடலமாக மீட்பு

செங்குன்றத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு மாயமான ஏழு வயது சிறுவன் அரிசி ஆலை வளாகத்திற்குள் இருந்த குட்டையில் சடலமாக மீட்பு
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு மாயமான ஏழு வயது சிறுவன் அரிசி ஆலை வளாகத்திற்குள் இருந்த குட்டையில் சடலமாக மீட்பு. திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சிவந்தி ஆதித்தனார் நகர் நேசமணி தெருவில் தேன்மொழி அரிசி ஆலை வளாகத்தின் உள்ளே மகேந்திரன் என்பவரின் மகன் லோகேஷ் குமார் 7 வயது அங்கிருந்த குட்டையில் சடலமாக மீட்கப்பட்டார் கடந்த இரண்டு நாட்களாக காணாமல் போன லோகேஷ் குமாரை சுற்று வட்டாரங்களில் தேடி கிடைக்காத நிலையில் குட்டையில் இறங்கி உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் செங்குன்றம் தீயணைப்புத் துறையினர் தேடிய போது சிறுவனை சடலமாக மீட்டனர் இதுகுறித்து சோழவரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story