ஆரணியில் ஸ்ரீ சீதா லக்ஷ்மண அனுமத்ஸமேத ஸ்ரீ கோதண்டராமர் ஆலயம் மற்றும் ஸ்ரீ வீராஞ்சநேயர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம்.
ஆரணியில் ஸ்ரீ சீதா லக்ஷ்மண அனுமத்ஸமேத ஸ்ரீ கோதண்டராமர் ஆலயம் மற்றும் ஸ்ரீ வீராஞ்சநேயர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம். திரளான பக்தர்கள் சாமி தரிசனம். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கொசப்பாளையம் ஆரணி தேவிகாபுரம் சாலை சுப்பிரமணிய சாஸ்திரியார் வீதியில் எழுந்தருளியுள்ள மிகவும் பழமை வாய்ந்த ஆலயமான அருள்மிகு சீதாலட்சுமண அனுமத்ஸமேத கோதண்டராமர் ஆலயம் மற்றும் ஸ்ரீ வீராஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில். கடந்த 07.02.25. வெள்ளிக்கிழமை அன்று ஆலயத்தில் யாகசாலை அமைத்து கணபதி ஹோமம், ஸ்ரீ லட்சமி நவகிரக ஹோமம், கோ பூஜை, புதிய சிலைகளுக்கு கண் திறத்தல் உள்ளிட்ட ஹோமம் நடந்தேறியது. அதனைத் தொடர்ந்து புனித நதியிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை கலங்களில் ஊற்றி மங்கள இசை தேவபாராயணம் இரண்டாம் கால பூஜை என சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெறுகின்றன. இதனையடுத்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை பட்டாச்சாரியர்க்ள மேல தாள வாத்தியத்துடன் கோவிலை சுற்றி வீதிஉலா கொண்டு செல்லப்பட்டு ஸ்ரீகோதண்ட ராமர் மூலவருக்கு அபிஷேகம் செய்து. மேலும் ராஜ கோபுரத்தில் உள்ள கலசத்தின் மீது புனித நீரை ஊற்றி மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் பழனி உள்பட விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் திரளாக பங்கேற்று ராம ராம அரேராம அரேராம என கோஷங்கள் எழுப்பி வழிபட்டனர். பின்னர் புனித நீரை பக்தர்கள் மீது தெளிக்க பட்டு இறுதியில் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.
Next Story



