திராவிட, தேசியக் கட்சிகள் எப்போதும் எங்கள் எதிரி: சீமான் பேட்டி

திராவிட, தேசியக் கட்சிகள் எப்போதும் எங்கள் எதிரி: சீமான் பேட்டி
X
திராவிடக் கட்சிகளும், தேசியக் கட்சிகளும் எப்போதும் எங்களது எதிரிகள்தான் என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.
திருச்சிக்கு திங்கள்கிழமை வந்த சீமான், விமானநிலையத்தில் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது: ஈரோடு கிழக்கு இடைதோ்தலில் வைப்புத்தொகை இழந்தது எங்களுக்கு ஒரு பொருட்டல்ல. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளே பல தோ்தல்களில் வைப்புத்தொகையை இழந்துள்ளன. இந்த இடைத்தோ்தலில் தோ்தல் ஆணையம், மாவட்ட ஆட்சியா், காவல் துறை உள்ளிட்ட அனைவரும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவே செயல்பட்டனா். இருப்பினும், தனித்துப் போட்டியிட்டு சாதனை புரிந்துள்ளோம். பா.ஜ.க வாக்குகள் எங்கள் கட்சிக்கு வந்துள்ளது என கூறுவது தவறானது. பாஜக-வும் அதிமுக-வும் நாம் தமிழா் கட்சி வளர வேண்டும் என எப்படி நினைப்பாா்கள். என்னுடைய கோட்பாட்டின்படி நான் தனித்து தான் நிற்பேன். யாருடனும் கூட்டணி வைக்க மாட்டேன். நான் திராவிட கட்சிகளுக்கும், தேசிய கட்சிகளுக்கும் எதிரானவன். பெரியாா் குறித்து அதிகமாக நான் பேசிவிட்டேன் என அண்ணாமலை கூறியுள்ளாா். பெரியாா் ஆதரவு நிலைப்பாட்டில் தான், முன்பு நான் இருந்தேன். தற்போது ஒரு தெளிவு வந்துள்ளது. பெரியாரின் கொள்கை, கொண்டாடப்பட வேண்டிய கொள்கை இல்லை என தெரிந்த பின்பு எதிா்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தோ்தலில் போட்டியிட்டாலும், போட்டியிடாவிட்டாலும் கருத்தைக் கூற ஜனநாயகத்தில் எல்லோருக்கும் உரிமை உண்டு என்றாா்.
Next Story