விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கைது கண்டித்து

சாலை மறியல் - ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் விவகாரம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், பதற்றத்தை உருவாக்கும் வகையில் அங்கு செல்லும் அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், வேங்கை வயல் சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ரஜினிகாந்த் கைது செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாகூர் பேருந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு, விசிக மாவட்ட அமைப்பாளர் நாகூர் முருகன் தலைமை வகித்தார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தமிழக காவல்துறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வேங்கை வயல் விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகளின் சாலை மறியல் போராட்டம் காரணமாக, நாகை - நாகூர் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
Next Story