மாமன்னர் சிலைக்கு மாலை அணிவித்த முன்னாள் அமைச்சர்கள்

மதுரையில் மாமன்னர் நாயக்கர் சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
மதுரையில் புகழ் பெற்ற திருமலை நாயக்கர் மஹால் முன்பு மாமன்னர் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று (பிப்.11) அவரது சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ ,ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு, ராஜன் செல்லப்பா எம்எல்ஏ ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். உடன் அதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story