சிறுவாபுரி பாலசுப்பிரமணிய கோவிலில் தைப்பூச விழா
பிரசித்தி பெற்ற சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தைப்பூச வழிபாடு நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பிரசித்தி பெற்ற சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணியசாமி திருக்கோவிலில் தைப்பூச தினத்தை முன்னிட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர் 50 ரூபாய் 100 ரூபாய் இலவச தரிசன கட்டணம் என மூன்று வழிகளில் தரிசனத்திற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால் திருக்குளம் மற்றும் வீதிகள் வழியாக நீண்ட வரிசையில் போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் தரிசனத்திற்கு பக்தர்கள் சென்று வருகின்றனர். சிறுவாபுரியில் போதிய பார்க்கிங் வாகன வசதிகள் குடிநீர் கழிப்பிட வசதிகள் இல்லாததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்
Next Story





