காஞ்சிபுரத்தில் விபத்தில் டூ - வீலரில் சென்றவர் பலி

X
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகாவில் உள்ள பிள்ளைப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமாரசாமி, 50. இவர், காஞ்சிபுரம் அருகேயுள்ள பாலுச்செட்டிச்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு, காதுகுத்து விழாவிற்கு, நேற்று முன்தினம் வந்தார். மாலை 5:00 மணிக்கு, தனது டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியபோது, தாமல் ஏரி அருகே அடையாளம் தெரியாத வாகனம், இவர் மீது மோதியுள்ளது. இதில் கீழே விழுந்த அவர், தலையில் பலத்த காயமடைந்து, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார். பாலுச்செட்டிச்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story

