தைப்பூச விழா

தைப்பூச விழா
X
கோபிசெட்டிபாளையம் பச்சைமலை சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் தைப்பூச விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது, கோவிலுக்கு வரும் சுமார் 50,000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார்
கோபிசெட்டிபாளையம் பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது இந்த கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும், அந்த வகையில் இந்த ஆண்டு தைப்பூச விழா இன்று கொண்டாடப்படும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள முருகன் கோவில்களில் பக்தர்கள் காவடி எடுத்தும் பால்குடம் ஏந்தியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர் அந்த வகையில் இன்று கோபிசெட்டிபாளையம் பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தைப்பூச விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது கோவிலில் நடைபெற்ற பூஜைகளில் காலை முதல் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தும் பல்வேறு பகுதிகளில் இருந்து காவடி மற்றும் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் வகையில் கோவில் நிர்வாகம் சார்பில் சுமார் 50,000 பக்தர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இந்த அன்னதான நிகழ்ச்சியை கோபி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கே ஏ செங்கோட்டையன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி துவக்கி வைத்தார் அதனைத் தொடர்ந்து தைப்பூச விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது
Next Story