ராமநாதபுரம் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது

X
ராமநாதபுரம் மனிதநேய மக்கள் கட்சி தொண்டி நிர்வாகிகள் தேர்வு, உறுப்பினர் சேர்க்கை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு என முப்பெரும் விழா மமக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி தலைமையில் நடைபெற்றது . மமக தொண்டி தலைவர் செய்யது அப்துல் காதர் வரவேற்றார். மனிதநேய மக்கள் கட்சி கவுன்சிலர் சமீமா பானு யான்பு இப்ராஹீம் அசன் சகுபர் உபயதுல்லா மகளிர் அணி மாவட்ட செயலாளர் சரிபா ஜைனுல் ஆப்தின் ஊடக அணி மாவட்ட செயலாளர் பகுருல்லா இளைஞரணி மாவட்ட செயலாளர் யாசிர் ஊடக அணி மாவட்ட பொருளாளர் சுல்த்தான் மாணவரணி மண்டல நிர்வாகி பகத் தொண்டி பேரூர் நிர்வாகிகள் பரக்கத் அலி மைதீன் அப்துல்லா அலாவுதீன் சேனா இப்ராஹிம் சலீம் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில செயலாளர் தொண்டி சாதிப்பாட்சா மாநில துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் தஞ்சை பாதுஷா, மாவட்ட தலைவர் பட்டானி மீரான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர் . பெரியசாமி நன்றி கூறினார்.
Next Story

