ராமநாதபுரம் தைப்பூச விழா கொண்டாட்டம்

ராமநாதபுரம் தைப்பூச விழா கொண்டாட்டம்
X
தைப்பூச விழாவை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டதுமகாதீபாராதணை நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வடக்கூர் வழிவிடும் முருகன் திருக்கோவிலில் இன்று தைப்பூச விழாவை முன்னிட்டு அதிகாலையில் கணபதி ஹோமம் உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து முருகன் சுவாமிக்கு மஞ்சள் பால் தயிர் சந்தனம் பஞ்சாமிர்தம் இளநீர் பன்னீர் திரவியப் பொடி உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்றது. தைப்பூச திருநாளை முன்னிட்டு வழிவிடும் முருகனுக்கு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் தொடர்ந்து பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பஜனைகள் பாடி அதிகாலையில் இருந்து முருகன் சுவாமியை வணங்கி வருகின்றனர். தொடர்ந்து மகா தீபாராதணை காண்பிக்கப்பட்டது இதில் முதுகுளத்தூர், மற்றும் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தைப்பூச விழாவை சிறப்பித்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story