ராமநாதபுரம் கும்பாபிஷேகம் நடைபெற்றது

X
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள காவடிபட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தர்ம முனீஸ்வரர், ஸ்ரீமதுரை வீரன், ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனரவர்த்தன அஷ்ட பந்தன மஹா குடமுழுக்கு பெருவிழா நடைபெற்றது. முன்னதாக மங்கள இசை, கோ பூஜை, கன்னிகா பூஜை, ரக்க்ஷô பந்தனம், யாகசாலை பூஜை, பூர்ணா குதி, சன்னதி ஹோமம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மங்கள இசை வாத்தியங்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, யாக சாலை பூஜையில் இருந்து கடம் புறப்பாடு, கோயில் வலம் வந்து, மதுரை மூலவர் தர்ம முனீஸ்வரர் சுவாமி, மதுரைவீரன், ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சுவாமிகளுக்கு 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம், தீபாதாரணை நடைபெற்றது. பொதுமக்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டது. இவ்விழாவில் காவடிபட்டி, கிளாமரம், மேலராமநதி, நீராவி, ராமசாமிபட்டி உள்பட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story

