தனியார் நர்சிங் கல்லூரிக்கு உரிய அங்கீகாரம் அதிகாரிகளின் ஆய்வில் அங்கீகாரம் இல்லை என உறுதி செய்யப்பட்டதால் கல்லூரிக்கு சீல் வைக்கப்படும் என கோட்டாட்சியர் வள்ளிக்கண்ணு உறுதி*

X
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ராமசாமிபுரத்தில் செயல்பட்டு வந்த தனியார் நர்சிங் கல்லூரிக்கு உரிய அங்கீகாரம் உள்ள என மாணவிகள் புகார் தெரிவித்து போராட்டம் நடத்தி வந்த நிலையில் அதிகாரிகளின் ஆய்வில் அங்கீகாரம் இல்லை என உறுதி செய்யப்பட்டதால் கல்லூரிக்கு சீல் வைக்கப்படும் என கோட்டாட்சியர் வள்ளிக்கண்ணு உறுதி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ராமசாமிபுரத்தில் தமிழ்நாடு மகளிர் கல்லூரி என்ற தனியார் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வந்தது. இந்த கல்லூரியில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திண்டுக்கல், கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து சுமார் 222 மாணவிகள் இங்கு படித்து வந்தனர். இந்நிலையில் இந்த கல்லூரிக்கு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தால் முறையான எந்தவித அங்கீகாரமும் வழங்கப்படவில்லை என புகார் எழுந்தது. இதனை உள்ளூர் தொடர்ந்து அந்த கல்லூரியில் படித்து வந்த மாணவிகள் தாங்கள் கல்லூரியில் சேரும்போது வழங்கிய அசல் சான்றிதழ்கள் மற்றும் கல்வி கட்டணத்தை திரும்ப வழங்க வலியுறுத்தி கடந்த இரண்டு தினங்களாக உள்ளிருப்பு போராட்டம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று மாலை விருதுநகர் மாவட்ட மருத்துவக் கல்லூரி இணை இயக்குநர் பாபுஜி தலைமையில் மருத்துவக் கல்லூரி அதிகாரிகள் கல்லூரியில் ஆய்வு செய்தனர். அப்போது அந்த கல்லூரிக்கு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தால் முறையான எந்தவித அங்கீகாரமும் வழங்கப்படவில்லை என தெரியவந்தது. இதனை மருத்துவத்துறை இணை இயக்குனர் பாபுஜி மாணவிகளிடம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து கோட்டாட்சியர் வள்ளிக்கண்ணு மாணவிகளை ஏமாற்றிய இந்த கல்லூரிக்கு சீல் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், கல்லூரி தாளாளர் டிக்காக் ஜாக்சன்(39) கைது செய்யப்படுவார் எனவும் மாணவிகள் கட்டிய கல்லூரி கட்டணம் அனைத்தும் முழுமையாக திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாணவிகளிடம் உறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து வரும் இருபதாம் தேதி மாணவிகள் செலுத்திய கல்வி கட்டணத்தை திரும்ப பெற காவல்துறை அதிகாரிகள் வருவாய்துறை அதிகாரிகள் கல்லூரி நிர்வாகத்தினர் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து கல்லூரி மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் அதிகாரிகளின் உறுதியை ஏற்று கல்லூரியில் இருந்து கலைந்து சென்றனர்.
Next Story

