எட்டுக்குடி முருகன் கோவிலுக்கு சொல்லும் பிரதான சாலையில்

போக்குவரத்து நெரிசல் - 2 மணி நேரம் பொதுமக்கள் தவிப்பு
நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த எட்டுக்குடியில், ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. எட்டுக்குடி முருகன் கோவிலுக்கு செல்வதற்கு, பிரதான சாலையாக உள்ள, திருக்குவளை விநாயகர் கோவில் அருகாமையில், குளக்கரை வலுவிழந்து சாலை துண்டிக்கப்பட்டு தடுப்பு சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், குளத்திற்கு அருகில் ஏற்படுத்தப்பட்ட தற்காலிக பாதை வழியே மட்டும் வாகனங்கள் செல்கிறது .இதனால் குறிப்பிட்ட அந்தப் பகுதியில் மட்டும் சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு, இருபுறமும் இருசக்கர வாகனங்கள் கார், ஆட்டோ உள்ளிட்டவை அணிவகுத்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை சீர் செய்ய குறைந்த அளவிலான காவலர்களே பாதுகாப்பு பணியில் இருந்ததால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். சுமார் 2 மணி நேரம் வரிசையில் காத்திருந்து, ஒரு ஒரு வாகனத்தின் பின்னால் மற்றொரு வாகனம் என்று ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை பொதுமக்களுக்கு ஏற்பட்டது. இந்நிலையில், தகவலறிந்து, சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை அவ்வழியே செல்லாமல், இரு சக்கர வாகனங்களை மட்டும் அனுமதித்து, போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வந்தனர். திருக்குவளை விநாயகர் கோவில் அருகாமையில், குளக்கரை வலுவிழந்து சாலை துண்டிக்கப்பட்டதும், போக்குவரத்து போலீசார் உடனடியாக எட்டுக்குடிக்கு செல்லும் பக்தர்களுக்கு மாற்று வழியை ஏற்பாடு செய்திருக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேதனையுடன் கூறினர்.
Next Story