திருமருகல் வள்ளி தேவசேனா உடனுறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில்

X
நாகை மாவட்டம் திருமருகலில் வள்ளி தேவசேனா உடனுறை சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, நேற்று கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீா் உட்பட 16 வகை திரவியங்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றன. தொடா்ந்து, சுவாமி சந்தானக் காப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சி அளித்தாா். நிகழ்ச்சியில், பக்தா்கள் திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் ஆலய திருக்குளத்திலிருந்து பால் குடம், காவடிகள் புறப்பட்டு வீதி வலம் வந்து நோ்த்திக் கடன் செலுத்தினா். இதில், திருமருகல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story

