திருமணம் செய்து கொள்ளக் கூறி பிளஸ் டூ மாணவியை மிரட்டியவர் கைது

திருமணம் செய்து கொள்ளக் கூறி பிளஸ் டூ மாணவியை மிரட்டியவர் கைது
X
திருமணம் செய்து கொள்ளக் கூறி பிளஸ் டூ மாணவியை மிரட்டியவர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அரியலூர் பிப்.12- ஜெயங்கொண்டம் அருகே பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுமியை கடந்த சில மாதங்களாக சிறுமி பள்ளிக்குச் செல்லும் போதும் திரும்ப வீட்டிற்கு செல்லும் போதும் தண்டலை கிராமம் மேல தெருவை சேர்ந்த ஜெயச்சந்திரன் மகன் ஆனந்த் ( 29) என்பவர் காதலிக்க கூறி வற்புறுத்தி தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். சிறுமியின் பெற்றோர் ஆனந்தை கண்டித்துள்ளனர். இந்நிலையில் நேற்று பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும்போது ஆனந்த் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் இல்லை என்றால் உன்னையும் உன் குடும்பத்தையும் கொலுத்தி விடுவேன் என்று மிரட்டி உள்ளார் இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதை அடுத்து சிறுமியின் தாய்கலா ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் போட்டோ சட்டத்தின் வழக்கு பதிவு செய்து ஆனந்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்
Next Story