தன்னை திருமணம் செய்யா விட்டால் கல்லூரி மாணவிக்கும் தந்தைக்கும் கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

தன்னை திருமணம் செய்யா விட்டால் கல்லூரி மாணவிக்கும் தந்தைக்கும் கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
X
தன்னை திருமணம் செய்யா விட்டால் கல்லூரி மாணவிக்கும் தந்தைக்கும் கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்தனர்.
அரியலூர், பிப்.12- கும்பகோணத்தில் பிஏ இங்கிலீஷ் படித்து வரும் கல்லூரி மாணவி ஒருவரை கல்லூரிக்கு செல்லும் போதும் வரும் போதும் மெய்க்காவல் புத்தூர் தெற்கு தெருவை சேர்ந்த சோழன் மகன் ஹரிஹரன் (25) என்பவர் சிறுமியிடம் காதலிப்பதாக கூறி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாய் தந்தையிடம் தெரிவித்ததை அடுத்து அவரது குடும்பத்தினர் ஹரிஹரன் குடும்பத்தாரிடம் தெரிவித்து கண்டித்துள்ளனர். இந்நிலையில் நேற்று சிறுமி தனது தந்தையுடன் பைக்கில் கல்லூரிக்கு செல்ல ஜெயங்கொண்டம் குறுக்குரோடு பகுதிக்கு பஸ் ஸ்டாப் வந்துள்ளார். அப்போது ஹரிஹரன் சிறுமியையும் அவரது அப்பாவிடமும் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் இல்லையென்றால் உன்னையும் உன் மகளையும் கொன்று விடுவேன் என்று மிரட்டி உள்ளார். அதிர்ச்சி அடைந்த சிறுமி இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story