ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயத்தில் தைப்பூச சிறப்பு வழிபாடு.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் மேலத்திருப்பாலக்குடி கிராமத்தில் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பால தண்டாயுதபாணி திருக்கோவில் அமைந்துள்ளது இந்த திருக்கோவிலில் 99 ஆம் ஆண்டு தைப்பூச திருவிழா விமர்சையாக நடைபெற்றது. பல்வேறு காவடிகள் எடுத்தும் பால்குடங்கள் எடுத்தும் பக்தர்கள் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமியை வழிபட்டார்கள். 1000க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட சுமார் 3000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தார்கள் .
Next Story



