சங்கரன் கோவிலில் தைப்பூசத் திருவிழா சண்முகர், சுவாமி அம்பாள் வீதியுலா

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் உலகப்புகழ் பெற்ற அருள்மிகு ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி சமேத கோமதி அம்பாள் திருக்கோவிலில் தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சண்முகர் ஆலயம் முன்பு ஷண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் பஞ்சமுக தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அருள்மிகு ஸ்ரீ சண்முகர், ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி, ஸ்ரீ கோமதி அம்பாள் ஆகிய தெய்வங்கள் தனித்தனி அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்... நான்கு ரத வீதிகளில் உலா வந்த நிலையில் பக்தர்கள் வழிநெடுகிலும் சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story

