ராமநாதபுரம் சுற்றுச்சூழல் வனம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சார கலைப் பயணம் 2025 நிகழ்ச்சி இராமநாதபுரம் மாவட்டத்தில் சி.எஸ்.ஐ. ஆசிரிய பயிற்சி பள்ளி, ஆல்வின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, முகமது சதக் தஸ்தகீர் பெண்கள் கலைக்கல்லூரி,முஹம்மது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லூரி போன்ற கல்லூரி,பள்ளிகளில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் சார்பில் கலைக்குழுவினர் பங்கேற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பாடல்கள் மற்றும் கிராமிய நடனங்களான கரகாட்டம், ஒயிலாட்டம் போன்ற கிராமியக் கலைகள் மூலமாக மாணவ மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்த்தல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடு, நீடித்த நிலையான வாழ்வியல் முறைகளை கடைப்பிடித்தல், காற்று மாசு தவிர்த்தல் போன்ற பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்வில் பொதுமக்களுக்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையின் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் துணி பைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுற்றுச்சூழல் துறையின் சார்பில் கிரீன் டிரஸ்ட் நிர்வாக இயக்குநரும் மதுரை கல்வி மாவட்ட சுற்றுச்சூழல் கல்வித்திட்ட ஒருங்கிணைப்பாளருமான குழந்தை வேல் செய்திருந்தார்
Next Story



