நத்தர்ஷா பள்ளிவாசல் அருகே மலை போல் உள்ள கழிவுகளை அகற்ற கோரிக்கை

X
திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட நத்தர்ஷா பள்ளிவாசல் 21 வது வார்டு பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி குடியிருப்புகளில் உள்ள கழிவு நீர் அருகே உள்ள ஜுபைர் ஸ்டோர் சாமியார் தோப்பு பகுதி பின்புரம் வழியாக கோட்டை ரயில்வே இன்ஸ்டியூட் ஒட்டி உள்ள தடுப்பு சுவர் வழியாக சென்று ஹாலிகிராஸ் கல்லூரி வளாகம் வழியாக சென்றது. கடந்த சில ஆண்டுகளுக்கு அந்த பகுதியில் வணிக வளாகம் (FSM) கட்டுவதற்காக கழிவுநீர் வாய்க்கால் செல்லும் பாதையை தடுத்து மாற்று வழியாக செல்ல வழி அமைத்தனர். இதனால் அடிக்கடி அந்த கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல முடியாமல் வீட்டின் உள்ளே கழிவு நீர் குழாய் வழியாக தண்ணீர் வந்து விடுகிறது. இதனால் பெரியவர்கள் முதியவர்கள் சிறுவர்கள் குழந்தைகள் என அனைவருக்கும் நோய் ஏற்பட்டு அடிக்கடி செல்லும் சூழல் ஏற்பட்டது. மேலும் இந்த கழிவு நீர் செல்லும் சாக்கடை ஐந்தடிக்கும் மேல் ஆழம் உள்ளது. ஆனால் பல ஆண்டுகளாக தூர்வாராமல் மண் தேங்கி சாக்கடை முழுவதும் அடைத்து தண்ணீர் செல்ல முடியாமல் அடைப்பு ஏற்பட்டுள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் உடனடியாக இந்த கழிவுகள் சாக்கடையை முழுவதுமாக தூர் வாரி கழிவுநீர் தண்ணீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் இது குறித்துப் பேசிய அப்பகுதி மக்கள் இது சம்பந்தமாக பல முறை இந்த வார்டின் திமுகவை சேர்ந்த கவுன்சிலர் மும்தாஜ் பேகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த தொகுதி திமுக எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் இதுவரை வந்து நேரில் பார்த்ததில்லை. மேலும் திமுகவை சேர்ந்த மாநகராட்சி மேயர் அன்பழகன் பல வார்டுகளில் ஆய்வு மேற்கொண்டாலும் இப்பகுதியை கண்டு கொள்ளவில்லை நாங்கள் யாரிடம் சொல்வது என்று தெரியாமல் பல முறை கவுன்சிலர் மும்தாஜ் பேகத்திடம் சொல்லியும் எந்தவித நடவடிக்கை எடுக்காததால், இது சம்பந்தமாக இப்பகுதி மேயர் மற்றும் இந்த தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் நாங்கள் அனைவரும் இதை சரி செய்யும் வரை சாலை மறியலில் ஈடுபடுவோம் என அப்பகுதி மக்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர் மேலும் கடந்த அதிமுக ஆட்சியில் கவுன்சிலராக இருந்த நத்தர்ஷா, இதேபோன்று கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு போது இரண்டு முறை தூர்வாரி கழிவு நீர் தங்கு தடையின்றி செல்ல வழிவகை செய்தார். ஆனால் தற்போதைய கவுன்சிலர் இதுகுறித்து கண்டு கொள்வதே இல்லை என வேதனை தெரிவித்தனர்.
Next Story

