வடலூர்: சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைப்பு

X
வடலூர் தைப்பூசம் திருவிழாவில் கூட்ட நெரிசலில் பெற்றோரை விட்டு பிரிந்து தனியாக தவித்து கொண்டிருந்த, வாய்பேச முடியாத, சற்று மனநலம் குன்றிய சிறுவனை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீட்டு புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்ததின்பேரில் ஒலிபெருக்கி மூலம் தகவல் தெரிவித்தும், யாரும் வராததால் 11.2.25 தேதி இரவு மேற்படி சிறுவனை மேட்டுக்குப்பம் கோபி சிவாச்சாரியார் சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டார். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS வழிகாட்டுதலின்படி காவல்துறையினர் மூலம் சமூக ஊடகங்களில் இச்செய்தி பகிரப்பட்டது . சமூக ஊடகங்களில் பரவிய செய்தியை கண்ட சிறுவனின் தந்தை மணிகண்டன் வயது 38, த/பெ சின்னத்தம்பி, பள்ளத்து தெரு, காந்தலவாடி கள்ளக்குறிச்சி மாவட்டம் என்பவர் தகவல் அறிந்து இன்று 12-02-25 அதிகாலை காவல் நிலையம் வந்தவரிடம் விசாரித்து, மேற்படி சிறுவனை பாதுகாப்பு இல்லத்தில் இருந்து அவர் பெற்றோரிடம் நல்ல முறையில் ஒப்படைக்கப்பட்டார். சிறுவன் விரைவாக தங்களிடம் பத்திரமாக ஒப்படைத்த காவல் துறையினருக்கு சிறுவனின் பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர் .
Next Story

