நிறுத்தத்தில் பஸ்கள் நிற்காததால் பள்ளி மாணவர்கள் அவதி

நிறுத்தத்தில் பஸ்கள் நிற்காததால் பள்ளி மாணவர்கள் அவதி
X
திருப்புலிவனத்தில் நிறுத்தத்தில் நிற்காத பேருந்தால் பள்ளி மாணவ மாணவிகள் அவதி
காஞ்சிபுரம் --- உத்திரமேரூர் நெடுஞ்சாலையில், திருப்புலிவனம் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு, சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட, மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு எதிரே, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பேருந்தில் செல்ல, ஏதுவாக பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்தில், கடந்த சில ஆண்டுகளாக பேருந்துகள் நிற்காமல் செல்கின்றன. இதனால், காலை நேரத்தில் மாணவ - மாணவியர் ஒரு கிலோமீட்டர் தூரமுள்ள திருப்புலிவனம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, நடந்தே பள்ளிக்கு செல்கின்றனர். அவ்வாறு, மாணவர்கள் நீண்ட துாரம் நடந்து செல்லும்போது, சாலையில் வேகமாக வரும் வாகனங்கள் மோதி விபத்தில் சிக்கும் சூழல் அதிகமாக உள்ளது. எனவே, பள்ளி எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பேருந்துகள் நின்று செல்ல பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story