எட்டுக்குடி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில்

எட்டுக்குடி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில்
X
தைப்பூச விழாவை முன்னிட்டு தெப்ப திருவிழா
நாகை மாவட்டம் எட்டுக்குடியில், முருகனின் ஆதிபடை வீடான ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. தைப்பூசத்தை முன்னிட்டு காலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகப் பெருமானை தரிசித்தனர். இந்நிலையில்,  நேற்று முன்தினம் இரவு சிறப்பு மலர் அலங்காரத்தில் ஸ்ரீ முருக பெருமான் வள்ளி தெய்வானையுடன் படிசட்டத்தில் ஆலயத்தை சுற்றி எடுத்து வரப்பட்டு, பின்னர் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து, நாதஸ்வரம், மேள தாளங்கள் முழங்க தெப்பம் மூன்று முறை வலம் வந்ததது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். தீயணைப்பு மீட்பு பணிகள் துறையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Next Story