தனியாா் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

X
துவாக்குடி அருகே உள்ள தேவராயநேரி பகுதியில் உள்ள தனியாா் பள்ளிஅலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு செவ்வாய்க்கிழமை பகலில் ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் மாலை 4.30 மணிக்குள் அது வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து, உடனடியாக பள்ளி நிா்வாகத்தினா் துவாக்குடி போலீஸாருக்கு தகவல் அளித்தனா். அதன்பேரில் காவல் ஆய்வாளா் ஈஸ்வரன் தலைமையிலான போலீஸாா் மற்றும் மோப்பநாய் படையினரும் வந்து பள்ளி வளாகத்தில் சோதனை மேற்கொண்டனா். இதில் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. எனவே இது வெறும் புரளியாக இருக்கலாம் என போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்
Next Story

