சங்கரன்கோவில் அருகே மனைவியை இரும்பு கம்பியால் தாக்கிய ராணுவ வீரர் கைது

சங்கரன்கோவில் அருகே மனைவியை இரும்பு கம்பியால் தாக்கிய ராணுவ வீரர் கைது
X
மனைவியை இரும்பு கம்பியால் தாக்கிய ராணுவ வீரர் கைது
தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் அருகே உள்ள கரிசல் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் முருகையா மகன் மணிகண்டன் வயது 31. மணிகண்டன் மேற்கு வங்காளத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். சங்கரன்கோவில் அருகே உள்ள சின்ன கோவிலாங்குளத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை மகள் சிவரஞ்சனி (28). ஐந்து வருடங்களுக்கு முன்பு இருவரும் காதல் திருமணம் செய்தனர். 4 வயதில் தட்சன் ராம்போ என்ற மகன் உள்ளனர். இந்நிலையில் சின்ன கோவிலாங்குளம் தனது தந்தை வீட்டில் இருந்த சிவரஞ்சனியை குடும்பத் தகராறில் ராணுவ வீரர் மணிகண்டன் தலையில் கம்பியால் தாக்கியுள்ளார். இதனை தடுக்க வந்த மாமியார் முத்துலட்சுமிக்கும் தலையில் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த காதல் மனைவி சிவரஞ்சனி அவரது தாயார் முத்துலட்சுமி ஆகியோர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக முத்துலட்சுமி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், இது குறித்த புகாரின் பேரில் சின்ன கோவிலான்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து ராணுவ வீரர் மணிகண்டனை கைது செய்தனர்.
Next Story