சங்கரன்கோவிலில் தர்பூசணி விற்பனை அமோகம்

சங்கரன்கோவிலில்  தர்பூசணி விற்பனை அமோகம்
X
தர்பூசணி விற்பனை அமோகம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் இதிலிருந்து தப்பிக்க பொதுமக்கள் இளநீர், குளிர்பானங்கள், பழச்சாறு போன்றவற்றை வாங்கி குடிப்பார்கள். குறிப்பாக தர்பூசணிகளை விரும்பி வாங்கி உண்பார்கள். தர்பூசணி உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு சத்தும் நிறைந்ததாகும். தற்போது கோடை காலம் வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதால் தர்பூசணி விற்பனை களைகட்ட தொடங்கியுள்ளது. இதனால் தர்பூசணி பழம் விலை 40 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தர்பூசணி பழம் அமோக விற்பனையால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story