புளியங்குடியில் பாலசுப்பிரமணியன் திருத்தேரோட்டம் நடைபெற்றது

X
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே புளியங்குடி பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழாவனது கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில் சுவாமி தினமும் பல்வேறு சப்பரங்களில் எழுந்தருளி காட்சி காட்சி தருவது வழக்கம். இந்நியிலையில் விழாவின் முக்கிய நாளான தைப்பூச திருவிழா கோவில் நடை திறக்கப்பட்டு பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்றதை தொடர்ந்து மகா தீப ஆராதனை நடைபெற்ற பின்னர் சுவாமி திருத்தேரில் எழுந்தருளிய நிலையில் பக்தர்கள் பக்திபரவசத்துடன் திருத்தேரை வடபிடித்து இழக்க துவங்கிய நிலையில் நான்கு ரதவீதிகளையும் சுற்றி நிலையத்திற்கு வந்த தேரின் ஒருபுற சக்கரமானது மண்ணில் புதைந்தது. இதனால் பக்தர்கள் மற்றும் தடிபோடுபவர்கள் வெகு நேரமாக தேரை இழுக்க முயற்ச்சி செய்தனர். சிறிது தூரம் மட்டுமே இழுக்க முடிந்தது. பின்னர் மீண்டும் தேரை இழுக்க முடியாமல் மின்சார கம்பில் தேர் உரசியபடி விற்றுச் சென்றனர். இதனால் இந்த பகுதியில் மின்சாரத்தை இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த பகுதியில் மின்சாரம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story

