தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் புதிய அலுவலக திறப்பு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் புதிய அலுவலக திறப்பு
X
தென்காசியில் புதிய அலுவலக திறப்பு
தென்காசி தெற்கு மாவட்ட, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் புதிய அலுவலக திறப்பு விழா, தென்காசி ரயில்வே சாலை எம்.கே.வி.கே., பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தேசிய முதன்மை துணைத்தலைவர் விக்கிரமராஜா தலைமை வகித்து புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். பரமசிவன் வரவேற்புரை ஆற்றினார். தமிழ்நாடு வணிகர்சங்கங்களின் பேரமைப்பு மாநில கூடுதல் செயலாளர் ஆர்.கே.காளிதாசன், மண்டல தலைவர் வைகுண்டராஜா, மாநில துணைத்தலைவர் கோல்டன் செல்வராஜ், மாநில இணை செயலாளர்கள் வி.டி.எஸ். ஆர். இஸ்மாயில், நாராயண சிங்கம், பாலகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் சந்திரமதி, ராஜா, பொருளாளர் முகமது இட்ராகிம், மகேஷ் குமார், கண்ணன், காளிமுத்து, விக்னேஷ் குமார், முருகன், செந்தில், செல்வன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story