சங்கரன்கோவில் பகுதிகளில் நெல் அறுவடை பணி துவக்கம் - விவசாயிகள் மகிழ்ச்சி

சங்கரன்கோவில் பகுதிகளில் நெல் அறுவடை பணி துவக்கம் - விவசாயிகள் மகிழ்ச்சி
X
நெல் அறுவடை பணி துவக்கம் - விவசாயிகள் மகிழ்ச்சி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள திருவேங்கடம், சிவகிரி, கலிங்கப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் என்.எல் ஆர் - குட்டை ரகப் பொன்னி, கல்சர் பொன்னி கோ - 20 ரக நெல் வகைகள் விவசாயம் செய்து வருகிறார்கள். இந்த ஆண்டு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பருவ காலத்தில் மழை பெய்து குளம் கண்மாய் நிரம்பி தக்க பருவத்தில் நெல் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைத்ததால் அப்பகுதி நெல் விவசாயிகள் நெல் விதைகள் நாற்றாங்கால் பாவுதல் செய்து நாற்றுகள் பறிக்கப்பட்டு, அடியுரமிட்டு, நாற்றுகள் நடவு செய்து களையெடுத்து மேலுரமிட்டு தண்ணீர் பற்றாக்குறையின்றி நீர்ப் பாய்ச்சப்பட்டு பயிர் செய்தனர். அதனால் கடந்த ஆண்டைக் காட்டிலும் ஏக்கருக்கு 10 மூடை முதல் 15 மூடை வரை கூடுதலான விளைச்சல் கண்டுள்ளதால் சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதிகளான விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story