தென்காசியில் புதிய ரேஷன் கடை கட்டிடம் இன்று திறப்பு

X
தென்காசி மாவட்டம் தென்காசி நகராட்சிக்குட்பட்ட 12 வது வார்டு பகுதியில் தென்காசி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலை கட்டிட திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. இந்த திறப்பு விழாவில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் மற்றும் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பழனி நாடார் தலைமையில் திறந்து வைத்தனர், இந்த நிகழ்ச்சியில் தென்காசி நகராட்சி துணைத் தலைவர் சுப்பையா உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

